நிலப்பட்டா வழங்கக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகை

கழிம்புதண்ணி ஊத்து பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2018-02-01 02:38 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட கழிம்புதண்ணி ஊத்து பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலக வளாகத்தில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் அதை தொடர்ந்து மலைவாழ் மக்கள் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட கழிம்பு தண்ணி ஊத்து (கோபால்சாமி மலை) பகுதியில் மலைவாழ் மக்கள் 65-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிறுதானிய மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர். மேலும் காட்டில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.

தற்போது தமிழக அரசு அனுபவ நிலபட்டா வழங்கி வரும் நிலையில், மலைவாழ் மக்கள் சாகுபடி செய்து வரும் விளை நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தும், இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனுபவ நிலபட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்