2016-ம் ஆண்டு நடந்த மோசடி வழக்கு: நடிகை சுருதி உள்பட 3 பேர் மீண்டும் கைது
2016-ம் ஆண்டு நடந்த மோசடி வழக்கில் நடிகை சுருதி உள்பட 3 பேரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை,
கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமிநகரை சேர்ந்தவர் நடிகை சுருதி (வயது 21). இவர் ஆடி போனா ஆவணி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் அந்த படம் வெளியாக வில்லை. இந்த நிலையில் அவர் வெளிநாட்டில் வேலைபார்க்கும் என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தார். இதுதொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பாலமுருகன் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடிகை சுருதி, அவருடைய தாய் சித்ரா, வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ், தம்பி சுபாஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடிகை சுருதியை கைது செய்த போது அங்கு இருந்த அவரது நண்பர் சபரிநாத் என்பவர் சாகுல்அமீது என்ற ஆயுதப்படை போலீஸ் ஏட்டுவுடன் தகராறு செய்தார். இது குறித்து போலீஸ்காரர் சாகுல்அமீது அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் சபரிநாத்தை கைது செய்தனர். அந்த வழக்கில் சுருதி, தாய் சித்ரா, வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ், தம்பி சுபாஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், நடிகை சுருதி உள்பட 3 பேர் நேற்று 3-வது முறையாக கைது செய்யப்பட்டனர். நாமக்கல்லை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். சுருதி தன்னை ஏமாற்றி திருமணம் செய்வதாக கூறி ரூ.43 லட்சத்தை பறித்துக் கொண்டதாக கடந்த 2016-ம் ஆண்டு கோவை குற்றப்பிரிவு போலீசில் சந்தோஷ்குமார் புகார் செய்திருந்தார். அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் கோர்ட்டு மற்றும் கோவை சிறை சூப்பிரண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில் சுருதி, தாய் சித்ரா, பிரசன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்ய போலீசார் அனுமதி கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து சுருதி உள்பட 3 பேரும் நேற்றுக்காலை கோவை 1-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது சந்தோஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சுருதி, சித்ரா, பிரசன்னவெங்கடேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கான ஆவணங்களை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். பின்னர் அவர்களை வருகிற 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு நம்பிராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் மீண்டும் கோவை சிறையில் அடைக்கப் பட்டனர்.
இந்த வழக்கில் சுருதியை போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு 5 நாட்கள் அனுமதி கேட்டு மாநகர குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணையை நாளை (இன்று) தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு நம்பிராஜன் உத்தரவிட்டார். எனவே சுருதியிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி கிடைக்குமா? என்பது இன்று (வியாழக்கிழமை) தெரியவரும். சுருதி உள்பட 4 பேரை போலீசார் ஏற்கனவே 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். திருமணம் செய்வதாக கூறி வாலிபர்களை மோசடி செய்தது தொடர்பாக கோவையில் மட்டும் நடிகை சுருதி மீது இதுவரை 3 வழக்குகள் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.