மிட்டாய் என நினைத்து எலி ‘கேக்’கை தின்ற கல்லூரி மாணவி சாவு

மிட்டாய் என நினைத்து எலி ‘கேக்’கை தின்ற கல்லூரி மாணவி பரி தாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-02-01 02:06 GMT
அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் சண்முகம் நகர் பகுதியை சேர்ந்தவர் முனவர்கான் (வயது 55). பழவியாபாரி. இவருடைய மகள் சையதுனிபி (21). இவர் முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசு கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

முனவர்கான் தனது வீட்டில் ஒரு அறையில் பழங்களை வைத்து இருந்தார். இதனால் அவருடைய வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்தது. எனவே எலியை கொல்வதற்காக ‘கேக்’ வைத்துள்ளார்.

எலி ‘கேக்’கை மிட்டாய் என நினைத்து அதை எடுத்து சையதுனிபி தின்று விட்டதாக தெரிகிறது. இதில் அவர் மயக்கமடைந்தார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக சையதுனிபி உயிரிழந்தார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்