திருவள்ளூர் அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
திருவள்ளூர் அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்,
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் தண்டபாணி தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அவர் வெள்ளவேடு அருகே உள்ள சொக்கநல்லூர் சத்திரம் வெளிவட்ட சாலையில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தண்டபாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது?அதை ஓட்டி சென்ற டிரைவர் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.