ஸ்ரீபெரும்புதூரில் பள்ளி பஸ்சின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூரில் பள்ளி பஸ்சின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் உயிர்தப்பினர்.
வாலாஜாபாத்,
ஸ்ரீபெரும்புதூரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்கிற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவ-மாணவிகள் வந்து செல்ல பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று மாலை பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டது. பள்ளியின் அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் பஸ் சென்றது. அப்போது திடீரென பஸ்சின் முன்சக்கரம் ஒன்று கழன்று சாலையில் ஓடியது.
இதனால் பஸ் சிறிது தூரம் சென்று ஒருபக்கமாக சாய்ந்து நின்றது. சர்வீஸ் சாலையில் குறைவான வேகத்தில் பஸ் சென்றதால் மாணவ, மாணவிகள் காயம் இன்றி உயிர்தப்பினர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பள்ளி குழந்தைகளை இறக்கிச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி பஸ்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்தாலும் இது போன்ற சம்பவங்கள் அவர்களின் சோதனைகளை கேள்விக்குறியாக்கி உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.