ஜல்லிக்கட்டில் காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்
திருமானூர் அருகே நடைபெற்ற ஜல்லிக் கட்டில் காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள கீழகுளத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது.
இதையொட்டி கீழகுளத்தூர் நடுவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 350-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
13 பேர் காயம்
காளைகள் முட்டியதில் திருச்சி மாவட்டம் விரகாலூரை சேர்ந்த டேவிட் (வயது 38), கள்ளூரை சேர்ந்த கனகராஜ் (40), கல்லக்குடி மணிகண்டன் (20) உள்பட 13 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மணிகண்டன் மட்டும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசு
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயங்கள், கட்டில், நாற்காலிகள், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கீழகுளத்தூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.