மன்னார்குடியில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
மன்னார்குடியில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மன்னார்குடி,
மன்னார்குடி புதுத்தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் செல்வராஜ் உத்தரவின் பேரில், மன்னார்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் மணாழகன், கோட்டூர் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் புதுத்தெருவில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.4 ஆயிரத்து 800 மதிப்புள்ள பான்மசாலா மற்றும் குட்கா ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் மணாழகன் கூறியதாவது:-
தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா விற்பனை செய்த பெட்டிக்கடைக்காரர் சதீஸ் மீது குற்றப்பத்திரிக்கை தயார் செய்து தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் அனுமதி கிடைத்தவுடன் மன்னார்குடி கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.