போலீஸ் நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
மாங்காடு போலீஸ் நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி,
மாங்காடு போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்தவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஸ்ரீதர் (வயது 30) என தெரியவந்தது. பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
போலீஸ் நிலையத்தில் இருந்த ஸ்ரீதர் திடீரென போலீசாரை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். போலீசார் விரட்டி சென்றும் அவரை பிடிக்க முடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாங்காடு போலீஸ் நிலையத்துக்கு போரூர் உதவி கமிஷனர் கண்ணன் வந்தார். அங்கு பணியில் இருந்த 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தட்சிணாமூர்த்தி, ரவிச்சந்திரனிடம் அவர் விசாரணை மேற்கொண்டார்.
இதனிடையே சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கைதியை தப்ப விட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரையும் பணிஇடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். தப்பி ஓடிய ஸ்ரீதரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.