பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட மாணவர் சிறையில் அடைப்பு

அம்பத்தூர் அருகே உள்ள பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் நேற்று முன் தினம் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் மோதலில் ஈடுபட்டனர்.;

Update: 2018-02-01 01:45 GMT
அம்பத்தூர்,

சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே உள்ள பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் நேற்று முன் தினம் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக திருநின்றவூரை சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் மோகன் (வயது 19) என்பவரை அம்பத்தூர் போலீசார் பிடித்து பெரம்பூர் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் 3 பேர் நெமிலிச்சேரியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை தேடி அங்கு விரைந்தனர். ஆனால் அங்கு மாணவர்கள் யாரும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மோகனை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்