நடைபயிற்சி செல்வோருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: புழல் ஏரிக்கரையை பூங்காவாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
புழல் ஏரிக்கரையை பூங்காவாக மாற்ற வேண்டும். அங்கு நடைபயிற்சி செல்வோருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
செங்குன்றம்,
சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்க ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் புழல் ஏரி. இந்த ஏரியின் சுற்றளவு சுமார் 50 கிலோமீட்டர் வரை பரந்து விரிந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. உயரம் 21.22 அடி ஆகும்.
ஆங்கிலேயர் காலத்தில் பொறியாளர் ஜோன்ஸ் என்பவர் இந்த ஏரிக்கரையை பலப்படுத்தி புழல் ஏரியை உருவாக்கினார். இதற்காக தண்ணீர் அளவை காட்டும் கோபுரத்துக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டு ‘ஜோன்ஸ் டவர்’ என அழைக்கப்படுகிறது.
ஏரிக்கு அருகில் பிரமாண்டமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில், புழல் ஏரியில் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பிறகு சென்னை மக்களுக்காக சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஏரி நிரம்பியவுடன் தண்ணீர் திறந்து விடப்படும் மதகு பகுதியில் இருந்து ஜோன்ஸ் டவர் வரை சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு இந்த ஏரியின் கரை அமைந்து உள்ளது. இந்த ஏரிக்கரையில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் விளக்குகள் எரிந்து வந்தன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மின் விளக்குகள் பழுதடைந்து விட்டதால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.10 கோடியில் புழல் ஏரியில் பராமரிப்பு பணி நடைபெற்றன. ஆனால் அப்போது பழுதடைந்த மின்விளக்குகள் சரி செய்யப்படவில்லை. கடந்த ஒரு வருடமாக செங்குன்றம் பகுதி மக்கள் காலை, மாலையில் 200-க்கும் மேற்பட்டோர் இந்த ஏரிக்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஏரிக்கரையில் நடைபயிற்சி செய்யும் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு வருகின்றன. மோட்டார் சைக்கிளில் ஏரிக்கரைக்கு வந்து அங்கு நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று விடுகின்றனர். தனியாக நடைபயிற்சியில் ஈடுபவர்களிடமும் நகை, பணம் பறித்து சென்று விடுகின்றனர். இதனால் நடைபயிற்சி செய்பவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டியது உள்ளது.
மேலும் கள்ளக்காதலர்களும் அங்கு எல்லை மீறும் காட்சிகள் நடைபெறுகிறது. இது நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது. கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்களும், ஆண்களும் கொலை செய்யப்பட்டு இந்த ஏரியில் வீசப்படும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.
ஏரிக்கரைக்கு செல்லும் முக்கிய நுழைவு வாயில் கதவை பொதுப்பணித்துறையினர் பூட்டு போட்டு வைத்து உள்ளனர். இதனால் இருசக்கர வாகனங்களை தவிர போலீஸ் ரோந்து வாகனங்கள் கூட உள்ளே நுழைய முடியாது.
அந்த கதவை திறந்து ஏரிக்கரையில் போலீசார் ரோந்து சென்று சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தி, நடைபயிற்சியில் ஈடுபடும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஏரிக்கரையில் உள்ள மின்விளக்குகள் மீண்டும் எரிய வைப்பதுடன், ஏரிக்கரையை பூங்காவாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.