நாகை-வேளாங்கண்ணிக்கு கூடுதல் ரெயில் இயக்குவதற்கு பரிசீலிக்கப்படும் ரெயில்வே பொது மேலாளர் தகவல்
திருச்சி-காரைக்கால் தண்டவாளம் தரஆய்வு முடிந்ததும் நாகை-வேளாங்கண்ணிக்கு கூடுதல் ரெயில் இயக்குவதற்கு பரிசீலிக்கப்படும் என்று தென்னக ரெயில்வே பொதுமேலாளர் தெரிவித்தார்.
நாகப்பட்டினம்,
நாகை, காரைக்கால், திருவாரூர் ரெயில் நிலையங்களில் மேம்படுத்தப்பட்டுள்ள பணிகள் குறித்து நேற்று தென்னக ரெயில்வே பொது மேலாளர் குல்ஸ்ரேஸ்தா ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக காரைக்காலில் ஆய்வு முடித்துவிட்டு நாகைக்கு தனிரெயிலில் வந்த பொது மேலாளரை, நாகை ரெயில் நிலைய அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வர்த்தகர் சங்கத்தினர் வரவேற்றனர். பின்னர் நாகை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ரெயில் தண்டவாளம் உறுதி தன்மை, ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. தற்போது ரெயில் நிலையங்களில் நடைபெற்றுள்ள பணிகள் திருப்தி அளிப்பதாக உள்ளது. மேலும் மும்மத சுற்றுலா பயணிகளும் நாகைக்கு அதிக அளவில் வருவதால் திருச்சி - காரைக்கால் தண்டவாளம் தர ஆய்வு முடிந்ததும், நாகை - வேளாங்கண்ணிக்கு கூடுதல் ரெயில் இயக்குவதற்கு பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேம்பாலம்
அப்போது பாரதீய ஜனதா கட்சி தஞ்சை கோட்ட பொறுப்பாளர் வரதராஜன் தலைமையில் பா.ஜ.க.வினர் தென்னக ரெயில்வே பொதுமேலாளரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், காரைக்காலில் இருந்து பேரளம் வழியாக மயிலாடுதுறைக்கு புதிய தண்டவாளம் அமைத்து ரெயில் இயக்க வேண்டும். திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக பட்டுக்கோட்டைக்கும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் வழியாக அகஸ்தியன் பள்ளிக்கும் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதைதொடர்ந்து நாகை ரெயில் நிலையம் அருகே உள்ள கீரைக்கொல்லை தெருவை சேர்ந்த பொதுமக்கள் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன் தலைமையில், பொதுமேலாளர் குல்ஸ்ரேஸ்தாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் எங்கள் தெருவிற்கு செல்ல ரெயில்வே தண்ட வாளத்தை கடந்து செல்ல உள்ளது.
இந்த ரெயில்வே கேட் ரெயில் நிலையம் அருகிலேயே உள்ளதால் அதிக நேரம் அடைத்தே வைக்கப்படுகிறது. எனவே, இந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்ல மேம்பாலம் அல்லது சுரங்க பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழு சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில் காரைக்கால் - திருச்சிக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும். அகல ரெயில் பாதை அமைப்பதற்காக நிறுத்தப்பட்ட நாகூர் - கொல்லம் பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். வெளிப்பாளையம் ரெயில் நிலைய நடைமேடையை உயர்த்துவதுடன், அந்த ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆய்வின்போது, திருச்சி ரெயில்வே செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மனோரஞ்சன், நாகை ரெயில்வே நிலைய கண் காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.