அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை தாக்கி கைதானவர் மருத்துவமனையில் சாவு
அ.தி.மு.க.எம்.எல்.ஏ.வை தாக்கிய சம்பவத்தின்போது அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்த மேடை அலங்கார தொழிலாளி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் வலியுறுத்துவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அடுக்கம்பாறை,
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் வசந்தம்மணி என்கிற மணிகண்டன் (வயது 41). மேடை அலங்கார தொழிலாளி. இவர் போளூர் ரெயில் நிலைய ரோட்டில் சி.டி.கடைகள் வைத்து நடத்தி வந்தார். கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான பன்னீர்செல்வம் தான் நடத்தும் நிகழ்ச்சிகளில் மேடைஅலங்காரத்துக்கு வசந்தம்மணியையே பயன்படுத்தி வந்தார்.
வசந்தம்மணி மேடை அலங்காரம் செய்த வகையில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பணம் கொடுக்க வேண்டியிருந்தது. அதனை கேட்பதற்காக கடந்த 21-ந் தேதி போளூரில் உள்ள பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வீட்டிற்கு அவர் சென்றார். ஆனால் எம்.எல்.ஏ. அங்கு இல்லை. அவர் போளூரில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தது தெரிய வந்தது.
ஆத்திரம் அடைந்த வசந்தம்மணி, எம்.எல்.ஏ.வின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்ட திருமண வரவேற்பு நடந்த மண்டபத்திற்கு சென்றார். அதற்குள் திருமண மண்டபத்திலிருந்து எம்.எல்.ஏ. புறப்பட்டு வெளியே வந்து விட்டார். அப்போது அங்கு சென்ற வசந்தம்மணி, எம்.எல்.ஏ.வின் காலில் விழுவதுபோல் விழுந்தார். பின்னர் திடீரென அவர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வை தாக்கினார். இதில் அவர் அணிந்திருந்த மோதிரம் குத்தியதில் எம்.எல்.ஏ. காயம் அடைந்தார்.
அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் திருமண மண்டபத்திற்கு முன் வசந்தம்மணியை தாக்கியதாக கூறப்படுகிறது. அதற்குள் அங்கு வந்த போலீசார் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி விட்டு வசந்தம்மணியை கைது செய்தனர்.
அவரை வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு வசந்தம்மணிக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. சிறுநீர் கழித்தபோது அதனுடன் ரத்தம் கலந்து வெளியேறியது. இதையடுத்து அவரை சிறை அதிகாரிகள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 25-ந் தேதி மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து மறுநாள் 26-ந் தேதி ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது வசந்தம்மணி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், அவரது உடல்நிலை மோசமாகி வருவதாக தெரிவித்தார். உடனடியாக ஜெயில் அதிகாரிகள் அவரை காலை 10.30 மணிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வசந்தம்மணியின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அதே நேரத்தில் ரத்தமும் உறையாத நிலையில் கட்டியாக இருந்துள்ளது. இந்த நிலையில் அவர் சுயநினைவின்றி இருந்தார். அவருக்கு ‘ஹீமோபிலியோ’ (ரத்தம் உறையாமை) மற்றும் நீரிழிவு நோய் இருந்தது. இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
26-ந் தேதி மாலை அவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்தனர்.
இதனை தொடர்ந்து வசந்தம்மணி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் அங்கு போலீசாரும் காவலில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் வசந்தம்மணியின் உடல் நிலை நேற்று அதிகாலை 5 மணியளவில் மோசமான நிலைக்கு சென்றது.
தகவலறிந்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் வசந்தம்மணி நேற்று காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்து போன வசந்தம்மணியின் உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உறவினர்கள், கட்சியினர் திரண்டுள்ளதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.