தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் சுசீந்திரம் பழையாற்றை மாணவர்கள் சுத்தப்படுத்தினர்

தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் சுசீந்திரம் பழையாற்றை மாணவர்கள் சுத்தப்படுத்தினர்.

Update: 2018-02-01 00:45 GMT
சுசீந்திரம்,

மத்திய– மாநில அரசு உத்தரவின் படி தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் சுகாதார குடியரசு வாரம் கடந்த 26–ந்தேதி முதல் நேற்று வரை கடைபிடிக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுத்திடவும், நீர்நிலைகளை பாதுகாத்திடவும், குப்பையில்லா குமரியை உருவாக்கவும்  பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் சுசீந்திரம் பழையாற்றை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

மாணவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் சுப்புலெட்சுமி, சுசீந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் மற்றும் துப்புரவு பணியாளர்கள், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி, வல்லன்குமாரவிளை அரசு மேல்நிலைப்பள்ளி, ஞானதீபம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த தேசிய பசுமைப்படை மாணவர்கள் கலந்துகொண்டு சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

 பின்னர், அப்பகுதிகளில் குப்பைகளை கொட்டாமல் இருக்க அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது. மேலும், அப்பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்