ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.
புதுக்கோட்டை,
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்த விவசாய தொழிலாளர்களுக்கு 3, 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். கடும் வறட்சியின் காரணமாக விவசாயம் முற்றிலுமாக சீரழிந்து வரும் நிலையில் விவசாய தொழிலாளர்களுக்கான வேலை நாட்களை 200-ஆகவும், கூலியை ரூ.400ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் உள்ள வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
கறம்பக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் அமிர்தலிங்கம் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார். இதைப்போல அன்னவாசலில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜோஷி தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் சங்கர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார்.
இதே போன்று விராலிமலையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அருணோதயம் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார். குன்னண்டார்கோவிலில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மருதப்பா தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட இணை செயலாளர்கள் பீமராஜ், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் குன்னண்டார்கோவில் நால்ரோடு பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கந்தர்வகோட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சித்திரைவேல் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கியில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்லமுத்து தலைமை தாங்கினார். இதில் ஏரிப்பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆவுடையார் கோவிலில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வீரையா தலைமை தாங்கினார். இதில் நிர்வாகி முருகேசன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொன்ன மராவதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நாவலன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மனுவை பெற்று கொண்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகள், இது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக தெரிவித்தனர்.