அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர், திருத் துறைப்பூண்டியில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2018-01-31 04:30 IST
திருவாரூர்,

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து தமிழக அரசு பஸ் கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

இந்த கட்டண குறைப்பு போதாது என்றும் பஸ் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் அருண் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார்.

இதில் கிளை செயலாளர் சத்தியசீலன், நகர செயலாளர் சுர்ஜித், ஒன்றிய செயலாளர் மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதால் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதேபோல திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி மாணவ-மாணவிகள் திருத்துறைப்பூண்டி அண்ணாசிலை அருகே திரண்டு பஸ் கட்டணம் உயர்த்தியதை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்