லாரியில் செம்மரக்கட்டைகள் கடத்தல் குடியாத்தத்தை சேர்ந்தவர் உள்பட 5 பேர் கைது
புச்சிநாயுடுகண்டிகை அருகே லாரியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட குடியாத்தத்தைச் சேர்ந்தவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 வாகனங்கள், 31 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீகாளஹஸ்தி,
ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த புச்சிநாயுடுகண்டிகை அருகே வனப்பகுதியில் இருந்து வாகனங்களில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தது. அதைத்தொடர்ந்து புச்சிநாயுடுகண்டிகை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்மோகன் தலைமையில் போலீசார் புச்சிநாயுடுகண்டிகையை அடுத்த ஸ்ரீகாளஹஸ்தி-தடா நெடுஞ்சாலையில் ஆலத்தூர் வளைவு அருகே தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு லாரி, இரு கார்கள் வேகமாக வந்தன. அந்த வாகனங்களை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால், அந்த வாகனங்கள் நிற்காமல் வேகமாக சென்றன. உடனே, போலீசார் ஒரு வாகனத்தில் விரட்டிச்சென்றனர். சோதனை நடத்தப்பட்ட இடத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் வாகனங்களை போலீசார் மடக்கினர். அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார், 5 பேர் பிடிபட்டனர்.
பிடிபட்டவர்கள் நகரியைச் சேர்ந்த சக்கரபாணி, திருப்பதியைச் சேர்ந்த நரசிம்மாரெட்டி, நகரி மண்டலம் டி.ஆர்.கண்டிகையைச் சேர்ந்த ரமேஷ், கடப்பா மாவட்டம் ராயச்சோட்டியைச் சேர்ந்த சுதாகர்ரெட்டி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த கோபி என்பது தெரிய வந்தது.
வாகனங்களைச் சோதனைச் செய்தபோது, லாரியில் மட்டும் 31 செம்மரக்கட்டைகள் இருந்ததும், அவை ஆலத்தூர் வனப்பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டதாக பிடிபட்டவர்கள் கூறினர். இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர். லாரி, கார்கள் மற்றும் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். இதுதொடர்பாக புச்சிநாயுடுகண்டிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.