ஆக்கிரமிப்பை அகற்றவிடாமல் பொக்லைன் எந்திரத்தை மறித்து ரகளை செய்த குடும்பத்தினர்
விவசாயி ஆக்கிரமித்து கட்டிய சுவரை அகற்றுவதற்காக சென்ற பொக்லைன் எந்திரத்தை மறித்து விவசாயியின் குடும்பத்தினர் தடுத்து ரகளையில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியபின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனூர் கிராமத்தில் வசித்து வருபவர் விஸ்வநாதன். விவசாயி. இவர் குடியிருப்பு பகுதியில் பொது வழிப்பாதையில் அரசு இடத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டி கழிப்பறையும் அமைத்திருந்தார். இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் பலமுறை விஸ்வநாதனிடம் தெரிவித்தும் அவர் அதனை அகற்றாமல் இருந்தார். இதனையடுத்து திருப்பத்தூர் கோர்ட்டில் தாசில்தார் வழக்கு தொடர்ந்தார். சம்பந்தப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவு நகலுடன் வருவாய் ஆய்வாளர்கள் சிவக்குமார், அரிஸ், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் கிராம உதவியாளர்கள் பொக்லைன் எந்திரத்துடன் அங்கு சென்றனர்.
ஆனால் விஸ்வநாதனும் அவரது குடும்பத்தினரும் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பொக்லைன் எந்திரம் மீது விஸ்வநாதனின் மனைவி திடீரென ஏறிக்கொண்டு அதனை இயக்கவிடாமல் தடுத்தார். அவரை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள் எச்சரித்தனர். ஆனால் ½ மணி நேரத்துக்கும் மேலாக அவர் பொக்லைன் எந்திரத்தின்மீதே இருந்தார். மேலும் அவரது குடும்பத்தினர் பொக்லைன் எந்திரத்தை நகரவிடாமல் அதன் முன் நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கு வருவாய்த்துறையினர் தகவல் அளித்தனர்.
அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறிய பெண்ணை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். பின்னர் இடையூறாக இருந்த மற்றவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து விஸ்வநாதன் ஆக்கிரமித்து கட்டியிருந்த சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறையை அகற்றி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பின்னர் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் அங்கிருந்து திரும்பினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.