வீட்டில் கஞ்சா பதுக்கிய கூலித்தொழிலாளி கைது 14 கிலோ பறிமுதல்

பட்டிவீரன்பட்டி அருகே குட்டிக்கரடு பகுதியை சேர்ந்தவர் பாண்டி.

Update: 2018-01-30 21:08 GMT

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் குட்டிக்கரடு பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது வீட்டில், கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார், பாண்டியின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 இதனையடுத்து பாண்டியை போலீசார் கைது செய்தனர். பட்டிவீரன்பட்டி மற்றும் அய்யம்பாளையம் பகுதியில் விற்பனை செய்வதற்காக, அவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்