கோடை விடுமுறையையொட்டி மும்பை– சென்னை இடையே ஏ.சி. சிறப்பு ரெயில் மத்திய ரெயில்வே அறிவிப்பு
கோடை விடுமுறையையொட்டி மும்பை– சென்னை இடையே ஏ.சி. சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
மும்பை,
கோடை விடுமுறையையொட்டி மும்பை– சென்னை இடையே ஏ.சி. சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
மும்பை– சென்னை ரெயில்மத்திய ரெயில்வே கோடை விடுமுறையையொட்டி 452 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது. இதில், மும்பை– சென்னை இடையே 24 ஏ.சி. சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ஏப்ரல் மாதம் 4–ந்தேதி முதல் ஜூன் 20–ந்தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமை மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில்(வண்டி எண் 01063) அடுத்த நாள் பகல் 12.55 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும்.
நிற்கும் இடங்கள்...இதே ரெயில் (01064) ஏப்ரல் 5–ந்தேதி முதல் ஜூன் 21–ந்தேதி வரை வாரந்தோறும் வியாழக்கிழமை பகல் 3.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு, அடுத்தநாள் மாலை 4.30 மணிக்கு சி.எஸ்.எம்.டி. வந்தடையும்.
இந்த ரெயில் தாதர், தானே, கல்யாண், லோனாவாலா, புனே, தவுண்ட், சோலாப்பூர், குல்பர்கா, அரக்கோணம் உள்ளிட்ட பல ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.