திருக்கோவிலூர் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

திருக்கோவிலூர் அருகே உள்ள தேவரடியார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்.

Update: 2018-01-30 21:00 GMT

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள தேவரடியார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சிவமல்லி(வயது 24). திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று சிவமல்லி திருவண்ணாமலையில் இருந்து பஸ் மூலம் தேவனூர் சாலையில் உள்ள தேவரடியார்குப்பம் பஸ் நிறுத்ததில் வந்திறங்கினார். பின்னர் அவர் அங்கிருந்து கிராம சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென சிவமல்லி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

 இதுகுறித்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்