வில்லேபார்லேயில் ஓட்டல் அறையில் நடன பயிற்சியாளர் தூக்குப்போட்டு தற்கொலை

வில்லேபார்லேயில் உள்ள ஓட்டலில் நடன பயிற்சியாளர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-01-30 22:00 GMT

மும்பை,

வில்லேபார்லேயில் உள்ள ஓட்டலில் நடன பயிற்சியாளர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடன பயிற்சியாளர்

பெங்களூருவை சேர்ந்தவர் அஸ்ரய்(வயது26). மும்பையில் உள்ள ஒரு நடன அகாடமியில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார். பின்னர் திடீரென பெஙகளூருவுக்கு வேறொரு வேலைக்காக சென்றார். ஆனால் அங்கு அவருக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து மீண்டும் மும்பையில் உள்ள நடன அகாடமியில் சேர்ந்து பணி செய்து வந்தார். இருப்பினும் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்து இருக்கிறார்.

தற்கொலை

இந்தநிலையில், வில்லேபார்லேயில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கிய அஸ்ரய், அங்கு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில், தனது தற்கொலை முடிவுக்காக குடும்பத்தினர் தன்னை மன்னித்து விடும்படி குறிப்பிட்டு இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்