விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
100 நாட்கள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் ஏற்கனவே பணி செய்தவர்களுக்கு உண்டான சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றிய தலைவர் கே.ரங்கசாமி தலைமை தாங்கினார். சங்க மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணியம், துணைத்தலைவர் எம்.முருகன், தாலுகா தலைவர் பி.கணேஷ், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் ராமதாஸ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுதா, வட்டார வளர்ச்சி அதிகாரி கே.மூர்த்தி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்தனர்.
பவானியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. தாலுகா பொதுச்செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவீந்திரன், அய்யாவு, நடராஜ், பரிமளாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் செந்தாமரை, ஜானகி, சித்ராதேவி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
டி.என்.பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ரவி தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிககள் கனகவேல், கே.ஆர்.விஜயராகவன், சசி, சண்முகவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.