1,270 போலி மதுபாட்டில்கள், 245 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் கணவன்-மனைவி உள்பட 5 பேர் கைது
பர்கூர் அருகே போலீசார் அதிரடியாக நடத்திய வாகன சோதனையில் 1,270 போலி மதுபாட்டில்கள், 245 லிட்டர் எரி சாராயம், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கணவன்-மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் போலி மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில், நெடுஞ்சாலை ரோந்து வாகன சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ் (ஓசூர்), சரவணரவி (கிருஷ்ணகிரி) மற்றும் போலீசார் ஒரப்பம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பர்கூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி ஒரு கார் வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தினர். ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதைத் தொடர்ந்து போலீசார் துரத்தி சென்று அந்த காரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் காரை ஓட்டிச் சென்றது சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 51) என தெரியவந்தது. மேலும் காரில் 570 போலி மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோவிந்தராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 570 போலி மதுபாட்டில்கள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த போலி மதுபாட்டில்கள் சேலம் மற்றும் புறநகர் பகுதியில் விற்பனைக்காக கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே போல பர்கூரில் வாணியம்பாடி பிரிவு சாலை அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூர் நோக்கி ஒரு கார் வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள குண்டியால்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (36) என தெரியவந்தது. மேலும் அந்த காரில், 7 கேன்களில் 245 லிட்டர் எரி சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரகாசை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கார் மற்றும் 245 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பிரகாசிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் தனது வீட்டில் காரிமங்கலத்தைச் சேர்ந்த ஜெகதீசன் போலி மதுபானங்கள் தயாரிப்பதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிரகாசின் வீட்டில் இருந்து 700 போலி மதுபாட்டில்கள், ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக பிரகாசின் மனைவி ஜானகி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் போலி மதுபாட்டில்களை தர்மபுரிக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. போலி மதுபானம் தயாரிக்க உதவிய வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள போடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த குமார் என்கிற மகேந்திரன் (24), இவரது சகோதரர் மனோகரன் (22) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெகதீசனை போலீசார் தேடி வருகிறார்கள்.