பஸ் கட்டண உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-01-30 22:45 GMT
நாமக்கல்,

தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்காந்தி தலைமை தாங்கினார்.

மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணை செயலாளர்கள் ஜனகராஜ், கோபி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி கொண்டே செல்லும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில் நகர செயலாளர்கள் சுப்பிரமணி, சண்முகம், சிவனேசன், மனோகரன், பால்துரை, பாலு, ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், முத்துசாமி, செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்