ஆடுகளை கடித்துக்கொன்று சிறுத்தைப்புலி அட்டகாசம்
கோத்தகிரி அருகே உள்ள ஆடத்தொரை கிராமத்தில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள ஆடத்தொரை கிராமத்தில் சில நாட்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சேகர், செல்வராஜ், சென்னராஜ் ஆகியோர் தங்களது ஆடுகளை நேற்று முன்தினம் காலை மேய்ச்சலுக்காக அங்குள்ள தேயிலை தோட்டம் அருகே விட்டு இருந்தனர்.
ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் ஆடுகள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ஆடுகளை தேடி பொதுமக்கள் சென்றபோது குடியிருப்பு பகுதிக்கு சற்று தொலைவில் தேயிலை தோட்டம் அருகே சில ஆடுகளின் பாதி உடல் மட்டும் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கட்டபெட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றதில் ஆடுகள் இறந்தது தெரியவந்தது. சேகருக்கு சொந்தமான 2 ஆடுகளும், செல்வராஜுக்கு சொந்தமான 4 ஆடுகளும், சென்னராஜுக்கு சொந்தமான 4 ஆடுகளும் என மொத்தம் 10 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றுள்ளது.
ஆடுகளின் உடல்களை பாதி தின்றும் மீதியை தேயிலை தோட்டங்களில் போட்டுவிட்டும் சிறுத்தைப்புலி சென்றுவிட்டது. இதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான 10 ஆடுகளை கடந்த மாதம் சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது, குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
சிறுத்தைப்புலி அட்டகாசத்தால் குடியிருப்பு பகுதிகளில் ஆடுகளை வளர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் வீடுகளில் கால்நடைகளை வளர்க்க அச்சமாக உள்ளது. குடியிருப்புக்குள் அடிக்கடி சிறுத்தைப்புலி புகுந்துவிடுவதால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல பீதியாக உள்ளது. எந்த நேரத்தில் சிறுத்தைப்புலி தாக்கும் என்ற பயத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உருவாகி விட்டது. சிறுத்தைப்புலி தாக்கி இறந்துபோன ஆடுகளின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ஆடுகளை கடித்துக்கொல்லும் சிறுத்தைப்புலியால் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பாக சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுபற்றி கட்டபெட்டு வனச்சரகர் கணேசன் கூறும்போது, சிறுத்தைப்புலி தாக்கி இறந்த ஆடுகளின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து சிறுத்தைப்புலியின் நடமாட்டம் தென்பட்டால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.