துப்புரவு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், தூய்மை தொழிலாளர் சங்கம் கோரிக்கை
ஓய்வு பெறும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு மாதஓய்வூதியம் மற்றும் சிறப்பு பணப் பலன்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம் கோரி உள்ளது.
விருதுநகர்,
தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்க மாநில தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
துப்புரவு பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி நிலுவைத்தொகையுடன் கூடியஊதியம் வழங்குவதோடு .அரசு ஆணை எண் 129-ன் படி சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வருவோருக்கு வீட்டுவாடகைப்படி ரூ.240, மருத்துவப்படி ரூ.100 ஆகியவற்றை 2013-ம் ஆண்டு முதல் நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். இந்த மாவட்டத்தில் பணியில் இருக்கும் போது இறந்த 20-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு குழுகாப்பீட்டுத்தொகை ரூ.3 லட்சம் வழங்கப்படாமல் உள்ளது.
1992-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத்தொகை ரூ.49,140-ம், 2007-ம் முதல் 2009-ம் ஆண்டு வரை வழங்க வேண்டிய ஊதிய நிலுவை தொகை ரூ.18,710-ம் உடனடியாக வழங்க வேண்டியது அவசியமாகும். 450 கிராம பஞ்சாயத்தில் பணிபுரியும் 1,500-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பணிப்பதிவேட்டினை உடனடியாக பதிவு செய்து அதன் நகலை வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ள சீருடை மற்றும் பணிதளவாடங்கள் வழங்க வேண்டும்
பணி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மாதஓய்வூதியம் ரூ.2 ஆயிரம், சிறப்பு பணப்பலன் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை 1.1.2014-ல் இருந்து வழங்க நடவடிக்கை எடுப்பதோடு 3 ஆண்டுகளாக மருத்துவ காப்பீட்டுத்தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரும் நிலையில் இதுவரை வழங்கப்படாமல் உள்ள மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும். மாதஊதியத்தை 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலதலைவர் சக்திவேல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.