மும்பையில் இருந்து பர்பானி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பையில் இருந்து பர்பானி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மஆசாமியை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
மும்பை குர்லா டெர்மினலில் இருந்து பர்பானிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மாலை 6.30 மணி அளவில் அசன்காவை கடந்து சென்றபோது, ரெயில்வே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில், எதிர்முனையில் பேசிய நபர் பர்பானி சென்று கொண்டிருக்கும் ரெயிலில் வெடிகுண்டு வைத்து உள்ளேன். அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு டெலிபோன் அழைப்பை துண்டித்துவிட்டார்.
இதுபற்றி போலீசார் ரெயில்வே அதிகாரிகளுக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக அந்த ரெயில் கார்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
கல்யாணில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த ரெயிலில் சோதனை போட்டனர். இதனால் ரெயிலில் பரபரப்பு உண்டானது. பயணிகள் பதற்றம் அடைந்து கீழே இறங்கினார்கள். ஆனால் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதன்பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்த ரெயில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.