ஓவைசியுடன் பா.ஜனதா கூட்டணி வைத்தால் சமுதாயத்தின் கதி என்ன?
முதல்-மந்திரி சித்தராமையா பல்வேறு துறை அதிகாரிகளுடன் பட்ஜெட் தயாரிப்பு குறித்து பெங்களூரு விதான சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
சிறுபான்மையினரின் ஓட்டுகளை பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓவைசி கட்சியுடன் பா.ஜனதா ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஓவைசி கட்சியும், பா.ஜனதாவும் சமுதாயத்தை உடைக்கும் கொள்கையை கொண்டவை. இத்தகைய கட்சிகள் கர்நாடக சட்டசபை தேர்தலில் பரஸ்பர கூட்டணி அமைத்து செயல்பட்டால் இந்த சமுதாயத்தின் கதி என்ன?. உத்தரபிரதேச, மராட்டிய மாநில தேர்தல்களிலும் இந்த கட்சிகள் கூட்டணி வைத்தனர்.
உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் ஓட்டுகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஓவைசி மற்றும் பா.ஜனதா கட்சிகள் கூட்டணி வைத்தன. ஆனால் நாங்கள் முஸ்லிம் அமைப்புகளுடன் கூட்டணி வைப்பதாக பா.ஜனதா பொய் குற்றச்சாட்டை கூறுகிறது. பொய் தகவல்களை பரப்புவதை பா.ஜனதா தனது வழக்கமாக கொண்டுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் சவனூர் கிராம பஞ்சாயத்து தேர்தலில் பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் பா.ஜனதா கூட்டணி வைத்தது.
கவுரி லங்கேஷ் கொலை விசாரணை குறித்து நான் கருத்து எதுவும் தெரிவிக்க மாட்டேன். பரமேஸ்வர் மந்திரியாக இருந்தபோது ஒரு குழு அமைக்கப்பட்டு போலீசாரின் சம்பளம் உயர்த்தப்பட்டது. நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்த புதிய காவலர்கள் நியமன பணியை நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தொடங்கினோம்.
ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஜமீர்அகமது கான் எம்.எல்.ஏ. கூறுகையில், “கர்நாடகத்திற்கு ஓவைசி போன்று பலர் வந்தாலும் எந்த மாற்றமும் நிகழாது. கர்நாடகத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் மிகுந்த புத்திசாலிகள். பா.ஜனதாவின் தந்திரங்களை நன்றாகவே அறிவார்கள். அனைத்து முஸ்லிம்களும் காங்கிரசை ஆதரிப்பார்கள்“ என்றார்.