சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா தேரோட்டம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;
தென்தாமரைகுளம்,
குமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில், இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா கடந்த 19-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு வழிபாடு, பணிவிடை நடந்தன.
8-ம் நாள் விழாவன்று அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
11-ம் நாள் விழாவான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு திருநடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு பூக்கள், பழங்கள் படைத்து சிறப்பு பணிவிடை நடந்தது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் அய்யா வைகுண்டர் தேருக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதியம் 12 மணி அளவில் பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட தொடக்க நிகழ்ச்சிக்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். தலைமைப்பதி நிர்வாகி பையன்ராஜா முன்னிலை வகித்தார். பூஜிதகுரு சுவாமி தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
பக்தர்கள் “சிவ சிவா, அரகரா அரகரா...” என பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். வீதியெங்கும் திரளான பக்தர்கள் திரண்டிருந்து அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தனர். தேருக்கு முன்னதாக முத்துக்குடைகள் எடுத்துச் செல்லப்பட்டன. பிற்பகல் 2 மணி அளவில் வடக்கு ரதவீதிக்கு வந்த தேர், தலைமைப்பதி வடக்கு வாசல் பகுதிக்கு வந்ததும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பூ, பழம், வெற்றிலை, பன்னீர் ஆகிய பொருட்களை சுருளாக படைத்து வழிபட்டனர். மாலையில் தேர் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களும் கலந்துகொண்டனர்.
நேற்று இரவு அய்யா ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதர்மம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. கலை அரங்கில் இரவில் இசை நிகழ்ச்சியும், அய்யாவழி சமய மாநாடும் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை பால்பையன், பையன் காமராஜ், பையன் ஆகியோர் செய்திருந்தனர்.