அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் பலி இளம்பெண் படுகாயம்
கன்னியாகுமரியில் அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் என்ஜினீயரிங் மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
கன்னியாகுமரி,
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று மாலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை சாமிதோப்பை சேர்ந்த செல்வம் ஓட்டி சென்றார். அந்த பஸ் கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்தில் நுழைய முயன்றது. அப்போது, அந்த வழியாக கோவளத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி 19 வயதுடைய வாலிபரும், ஒரு இளம்பெண்ணும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்தை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவந்தனர். அவர்கள் விபத்தில் படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், இறந்த வாலிபரிடம் இருந்த ஓட்டுனர் உரிமத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, இறந்தவர் மிடாலம், நடுத்துறையை சேர்ந்த ஜெஸ்டின் அலெக்ஸ் (வயது 19) என்பதும், நாகர்கோவிலில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது.
படுகாயம் அடைந்த இளம்பெண் மிடாலத்தை சேர்ந்த புதுப்பெண் ஆவார். விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.