பெரம்பலூர் மாவட்டங்களில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்டங்களில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-01-29 22:30 GMT
பெரம்பலூர்,

அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ் வரவேற்று பேசினார். தொழிற்சங்க பேரவை துணைதலைவர் மாதவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கையில் சட்டி, மண்பானையுடன் கலந்து கொண்டு, உயர்த்திய பஸ் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். புதிய பஸ்களை அரசு வாங்கி போக்குவரத்து தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

பெரம்பலூரில்...

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க.வினர் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை. காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கணபதி, கண்ணுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் வேணுராம் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது. இதனால் பஸ்சை பயன்படுத்தும் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பஸ்களை விட அரசு பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே, பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதில் சுடர்செல்வன், சங்கர், மேகலா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்