தி.மு.க. - தோழமை கட்சியினர் சாலை மறியல் எம்.எல்.ஏ. உள்பட 1,756 பேர் கைதாகி விடுதலை
பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கரூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் எம்.எல்.ஏ. உள்பட 1,756 பேர் கைதாகி விடுதலையானார்கள்.
தோகைமலை,
பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கரூர் மாவட்டத்தில் தி.மு.க. தலைமையில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்பட தோழமை கட்சியினர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோகைமலையில் பஸ் நிலையம் அருகே ராமர் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் குளித்தலையில் தி.மு.க. நகர செயலாளர் மாணிக்கம் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் 47 பேர் கைது செய்யப்பட்டனர். அய்யர்மலையில் ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமையில் நடந்த சாலை மறியலில் 140 பேர் கைது செய்யப்பட்டனர். தரகம்பட்டியில் நடந்த மறியலில் 116 பேர் கைதாகினர்.
கிருஷ்ணராயபுரம் பஸ் நிலையத்தில் ஒன்றிய செயலாளர் ரவிராஜா தலைமையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 105 பேரை போலீசார் கைது செய்தனர். லாலாப்பேட்டை பஸ் நிலையத்தில் ஒன்றிய அவைத்தலைவர் அரவாண்டி தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் 38 பேர் கைதானார்கள்.
தாந்தோன்றிமலை ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரகுநாதன் தலைமையில் வெள்ளியணை கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்பட 140 பேர் கைது செய்யப்பட்டனர். க.பரமத்தி ஒன்றிய தி.மு.க. செயலாளர் கருணாநிதி தலைமையில் சின்னதாராபுரம் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 153 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் கரூர் மண்மங்கலத்தில் மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் 145 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் டவுன், வெங்கமேடு, தாந்தோன்றிமலை உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 16 இடங்களில் தி.மு.க. தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஒரு எம்.எல்.ஏ. உள்பட மொத்தம் 1,756 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் ஆங்காங்கே அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் கரூர் டவுன் உள்பட பல இடங்களில் போக்குவரத்து பாதிப்படைந்தது. அய்யர்மலையில் 2 முறை நடந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மறியல் போராட்டம் முடிந்ததும் போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.