கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்,
நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் நாகை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பேரூராட்சி தலைவர்கள் சிங்காரவேலு, செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சிகளில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையை சரியாக செய்து உடனே உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். காவிரி நீரை தமிழகத்திற்கு தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டிப்பதுடன், உடனே காவிரிநீரை தமிழகத்திற்கு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். பயிர்க்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். பாசன வாய்க்கால்கள், குளங்களை தூர்வார வேண்டும். நாகை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட துணை தலைவர்கள் பாலசுப்பிரமணியன், கேசவன், மருதவாணன், வட்டார தலைவர்கள் சண்முகம், சுப்பிரமணியன், அருள்வளன், நகர தலைவர்கள் ராஜசேகர், சுப்பராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.