மாணவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள்- பொதுமக்கள் சாலை மறியல்
என்ஜினீயரிங் மாணவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி நீடாமங்கலத்தில் அவரது உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காமராசர் காலனியை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகன் சபரி நாதன்(வயது22). இவர், சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சென்னையில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
சாந்தி, தற்போது கணவரை விட்டு பிரிந்து தனது தாய் சரஸ்வதி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை சபரிநாதன் விடுதியின் மாடியில் இருந்து கீழே விழுந்து காயங்களுடன் கிடந்துள்ளார். உடனே சக மாணவர்கள் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சென்னை துரைப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து சபரிநாதனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சபரிநாதன் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுகுறித்து நீடாமங்கலத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் சென்னைக்கு வந்தனர். அவர்களிடம் போலீசார், பிரேத பரிசோதனைக்கு பிறகு சபரிநாதனின் உடலை ஒப்படைத்தனர். நேற்று அதிகாலை சபரிநாதன் உடல் நீடாமங்கலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
சபரிநாதன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நீடாமங்கலம் காமராசர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் நீடாமங்கலம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் சபரிநாதனின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
சபரிநாதனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அவரது உறவினர்கள் நீடாமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். சாலை மறியல் போராட்டத்தினால் நாகை-தஞ்சை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.