சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகிறது: வாலிபருடன், ஆசிரியை நெருக்கமாக இருக்கும் வீடியோ
ராயக்கோட்டை அருகே வாலிபருடன் ஆசிரியை நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ராயக்கோட்டை அருகே உள்ளது நெல்லூர். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நெல்லூர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் ஓசூரைச் சேர்ந்த ஒரு ஆசிரியை பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த ஆசிரியை, வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளி வந்தது. இதை அறிந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியையை கண்டித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அந்த ஆசிரியை, வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோக்கள் வலைதளத்தில் வேகமாக பரவியது.
பெற்றோர் போராட்டம்
பள்ளியின் பெயரை குறிப்பிட்டும், அந்த ஆசிரியை மற்றும் விவரங்களை குறிப்பிட்டும் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியானதை பார்த்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் நேற்று காலை மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியின் அருகில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம் பேசிய மாணவ, மாணவிகளின் பெற்றோர், இந்த ஆசிரியையால் பள்ளிக்கு கெட்ட பெயர். தன்னை விட மிகவும் சிறிய வயது வாலிபர் ஒருவருடன் அவர் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பள்ளியின் பெயரை குறிப்பிட்டு கெட்ட பெயர் ஏற்படுத்தி உள்ளார். எனவே இவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
பள்ளி இயங்கவில்லை
இந்த தகவல் அறிந்து கெலமங்கலம் தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன் பள்ளிக்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட ஆசிரியையை பள்ளிக்கு வரக்கூடாது என்று கூறியுள்ளதாகவும், அவரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து மாணவ, மாணவிகளை அவரது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதன் காரணமாக நேற்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கவில்லை. இந்த சம்பவம் ராயக்கோட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.