சென்னையில் 62 இடங்களில் சாலைமறியல் 12 ஆயிரத்து 500 பேர் கைதாகி விடுதலை
சென்னையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து 62 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. சென்னையில் 62 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 2 ஆயிரம் பெண்கள் உள்பட 12 ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக சென்னை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.