பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி விழுப்புரத்தில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி விழுப்புரத்தில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில முன்னாள் துணை செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். மாநில மருத்துவ அணி துணை செயலாளர் முத்துக்குமார், மாவட்ட அவைத்தலைவர்கள் கணபதி, கோவி.முருகன், பொருளாளர்கள் தயாநிதி, கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் கலந்துகொண்டு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் புருஷோத்தமன், வெங்கடேசன், சுந்தரேசன், அண்ணாத்துரை, குழந்தைவேல், விஜயகுமார், சூடாமணி மணவாளன், வசந்தாகண்ணுப்பிள்ளை உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷம் எழுப்பினார்கள். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் முருகன் நன்றி கூறினார்.