பஸ் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்,
பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் விசைத்தறி பி.ஆர்.குழந்தைவேல் (திருப்பூர் வடக்கு), முத்துவெங்கடேஸ்வரன்(திருப்பூர் தெற்கு) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மத்திய பகுதி செயலாளர் ஷாஜஹான் வரவேற்று பேசினார்.
கட்சியின் மாநில துணை செயலாளர் ஏ.எஸ்.அக்பர் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் ஏந்தியபடி கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கவேல், துணைச்செயலாளர்கள் சரவணக்குமார், பிரசாத்குமார், சித்ராதேவி, விஜயகாந்த் மன்ற செயலாளர் ஆனந்த், இளைஞர் அணி செயலாளர் மணி உள்பட பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். முடிவில் மத்திய பகுதி கழக அவைத்தலைவர் பார்த்திபன் நன்றி கூறினார்.