பஸ் கட்டண உயர்வை கண்டித்து மண்டபம் ஒன்றிய தி.மு.க. சார்பில் சாலை மறியல்

தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மண்டபம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-01-29 22:30 GMT
பனைக்குளம்,

தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. சார்பில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் அறிவித்தார். இதன்படி மண்டபம் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாரதிநகரில் ஒன்றிய செயலாளர் வி.சி.கனகராஜன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜா, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் கவிதா கதிரேசன், ஓம்சக்தி நகர் செயலாளர் மோகன், வி.சி.லோகநாதன், மாவட்ட பிரதிநிதி பட்டணம்காத்தான் சந்திரன், பெருங்குளம் ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சாலை மறியலில் சோமசுந்தரம், வாலாந்தரவை ரமேஷ், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி புதுவலசை ஜெய்னுதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக 76 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல மண்டபம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் உச்சிப்புளி பஸ் நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வம் தலைமையில் இருமேனி முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வம், அவை தலைவர் நாகராஜன், ஊராட்சி செயலாளர் இருமேனி சக்பகுருதீன், இளைஞரணி ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், வேதாளை செயலாளர் கோவிந்தன், அன்பழகன், ரவி உள்பட ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து 59 பேரை உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர். உச்சிப்புளி யூனியன் அலுவலகத்தின் எதிரே மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கோவிந்தமூர்த்தி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட பத்மநாதன், சத்தீசுவரன், கருப்பையா, ரமேஷ் உள்பட 12 பேரை உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர்.

மண்டபம் நகர் தி.மு.க. சார்பில் ராஜா தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத்ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜபருல்லா, மனிதநேய மக்கள் கட்சி கபீர் அகமது, ம.தி.மு.க. நாகராஜன், காங்கிரஸ் கட்சி சுகர்னோ, கம்யூனிஸ்டு கட்சி முருகேசன், ராமமூர்த்தி, குலாம், தில்லை, ஹாஜா, ஷாஜகான், நாசர்அலிகான், முகைதீன் உள்பட 88 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அழகன்குளம் ஜீவானந்தம், வாலாந்தரவை முன்னாள் ஊராட்சி உறுப்பினர் பூர்ணவேல் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்