பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்
புதுவையில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களின் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதுவை காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் ராஜா திரையரங்கம் அருகே ஒன்று திரண்டனர்.
மாணவர்கள் கைகளை கோர்த்தபடி சாலையில் நின்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரியகடை போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின் அங்கு போக்குவரத்து சீரானது.
இதே போல் தவளக்குப்பம் ராஜீவ்காந்தி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து, ஊர்வலமாக வந்து தவளக்குப்பம் நல்லவாடு பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்
புதுவை சுதேசி மில் அருகே சோசலிஸ்ட் யுனிட்டி சென்டர் ஆப் இந்தியா கட்சி சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் லெனின் தலைமை தாங்கினார். இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்து, ஏழுமலை, கலைவரதன், பிரளயன், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.