மூடப்பட்ட பாதையை திறக்க கோரி திண்டிவனம் ரெயில் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
மூடப்பட்டபாதையை திறக்க கோரி திண்டி வனம் ரெயில் நிலையத்தை பொது மக்கள் முற்றுகையிட் டனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் ரெயில் நிலையம் அருகே சென்னை சாலையில் காவேரிப்பாக்கம் பகுதி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காவேரிபாக்கத்தில் இருந்து திண்டிவனம் நகருக்கு சென்று வர ஏதுவாக ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப் பட்டுள்ளது.
ஆனால் அப்பகுதி மக்கள் சுரங்கப்பாதையை பயன்படுத் தாமல், ரெயில்வே தண்டவாள பாதையை கடந்து திண்டி வனம் நகருக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகம் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த தண்டவாள பாதையை திடீரென மூடிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் முன் னாள் கவுன்சிலர் ஜெயராஜ் தலைமையில் நேற்று திண்டிவனம் ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் பயன்படுத்தி வந்த பாதையை திறக்கவேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ரெயில் நிலைய அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே பாதுகாப்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், சுரங்கப்பாதை யில் தண்ணீர் தேங்குவதாலும், வாகனங்கள் வேகமாக செல்வதாலும் பெண்கள் சென்று வர அச்சமாக உள்ளது. ஆகவே நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த தண்டவாள பாதையை மீண்டும் திறக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு போலீசார் இதுபற்றி ரெயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், அதுவரை சுரங்கப்பாதையை பொது மக்கள் பயன்படுத்தவேண்டும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.