வேலைக்கு செல்லக்கூடாது என்று கல்லூரி பெண் விரிவுரையாளர் மீது தாக்குதல், கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
வேலைக்கு செல்லக் கூடாது என்று கூறி கல்லூரி விரிவுரையாளரை அடித்து துன்புறுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி,
தேனி அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகள் பாரதி (வயது 35). இவர் தேனி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த வெங்கிடசாமி மகன் ஹரிராம்முரளி (48) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
பின்னர் இவர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் பாரதியின் நகை மற்றும் பொருட்களை கணவர் வீட்டினர் வாங்கி வைத்துக் கொண்டு, திருப்பிக் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரை வேலைக்கு செல்லக்கூடாது என்றும் கூறி அவரை மிரட்டி வந்துள்ளனர்.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் பாரதியை அவருடைய கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் அடித்து, பலர் முன்னிலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் பாரதி புகார் செய்தார். புகார் குறித்து நடவடிக்கை எடுக்க தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு, அவர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து, பாரதியை தாக்கியதாக அவருடைய கணவர் ஹரிராம்முரளி, மாமியார் சாரதா, மாமனார் வெங்கிடசாமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.