காங்கேயம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; தொழிலாளி சாவு

காங்கேயம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2018-01-28 23:13 GMT
காங்கேயம்,

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 35). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை அவல்பூந்துறையில் இருந்து மோட்டார்சைக்கிளில் காங்கேயத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது காங்கேயம் அருகே நால்ரோட்டில் இருந்து, நத்தக்காடையூர் நோக்கி சென்ற தனியார் பள்ளி வேன் குட்டறை என்ற இடத்தில் சுப்பிரமணியின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த காங்கேயம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்