கூரியர் நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் பார்சலை பறித்தவர் கைது

கூரியர் நிறுவன ஊழியரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி ரூ.4 லட்சம் மதிப்புள்ள பார்சலை பறித்துவிட்டு தப்பிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2018-01-29 04:41 IST

மும்பை,

மும்பை புலேஷ்வர் கபுத்தர்கானா பகுதியில் உள்ள கூரியர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் கி‌ஷன்(வயது22). இவர் வாடிக்கையாளர்களுக்கு பார்சலை கொண்டு செல்லும் பணியை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கி‌ஷன் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பார்சலை கைப்பையில் வைத்து எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.

அப்போது, கி‌ஷனை நெருங்கி வந்த ஆசாமி ஒருவர் திடீரென தான் வைத்திருந்த மிளகாய் பொடியை கி‌ஷனின் முகத்தில் தூவி, அவர் வைத்திருந்த கைப்பையை பறித்துவிட்டு தப்பிஓடினார்.

இதில் சுதாரித்து கொண்ட கி‌ஷன் திருடன்... திருடன்... என சத்தம்போட்டு உள்ளார். இவரது சத்தம்கேட்ட பொதுமக்கள் கைப்பையை பறித்துவிட்டு தப்பிச்சென்ற நபரை விரட்டி பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள பார்சலை மீட்டு கி‌ஷனிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் கண்ணில் காயமடைந்த கி‌ஷனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அக்ரிபாடாவை சேர்ந்த சையத் சாரிப்(44) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்