மணல் கடத்தலை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு

செங்கல்பட்டு அருகே மணல் கடத்தலை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு விழுந்தது.

Update: 2018-01-28 22:27 GMT
செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட மனப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகன் கமல் (வயது 29). விவசாயி. செங்கல்பட்டு அடுத்த பீடிநகரை சேர்ந்தவர் ரஞ்சித் (40). அரசு பஸ் டிரைவர். இந்த நிலையில் ரஞ்சித் தனது காரில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தினார்.

மணல் கடத்தலை கமல் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

நேற்று முன்தினம் இரவு கமல் மனப்பாக்கத்தில் இருந்து பீடி நகர் வழியாக செங்கல்பட்டு நோக்கி சென்றார். அப்போது மணல் கடத்தல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித் தன்னிடம் இருந்த கத்தியால் கமலை வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த கமலை செங்கல்பட்டு தாலுகா போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் ரஞ்சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்