சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் வனம், ஆழ்கடல் திகில் காட்சி அரங்கம்
வெளிநாடுகளில் இருப்பது போல் சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் வனம், ஆழ்கடல் திகில் காட்சி அரங்கத்தை மே மாதம் திறக்க மீன்வளத்துறை திட்டமிட்டு உள்ளது.
சென்னை,
சென்னை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு மையமாக மெரினா கடற்கரை இருக்கிறது. ஆனால் படகு சவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்காக புறநகர் பகுதிகளில் உள்ள பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையை போக்க சென்னையின் மையப்பகுதியில் உள்ள சேத்துப்பட்டு ஏரியை ரூ.42 கோடியில் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்பாடு செய்தார். அதன்படி மீன்வளத்துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சீரமைக்கப்பட்டன. பின்னர் சேத்துப்பட்டு பசுமை பூங்காவை 2016-ம் ஆண்டு ஜெயலலிதா திறந்து வைத்தார்.
தற்போது அங்கு வெளிநாடுகளில் இருப்பது போல் வனம் மற்றும் ஆழ்கடலில் உள்ள திகில் காட்சிகளை காணும் வகையில் சிறிய வகையில் அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் தூண்டில் மீன்பிடிப்பு, நீர் சாகச விளையாட்டுகள், 1½ கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபயிற்சி பாதைகள், படகு சவாரி, திறந்தவெளி அரங்கங்கள், சிறுவர்கள் விளையாட்டு திடல், உணவகங்கள் போன்ற வசதிகள் உள்ளன.
வண்ணத்து பூச்சிகளை கவர மகரந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இவை பசுமையாக இருப்பதற்காக ஏரி கரையோரம் அழகிய மற்றும் அரிய வகை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. திறக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 4½ லட்சம் பார்வையாளர்கள் இந்த பூங்காவை கண்டுகளித்து உள்ளனர்.
தற்போது வெளிநாடுகளில் இருப்பது போல் 3-டி வீடியோ காட்சிகளுடன் கூடிய திகில் அனுபவங்களை உணர்த்தும் வகையில் சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் ரூ.6 கோடியில் 2 தளங்களுடன் சிறிய அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. தரைதளத்தில் வண்ண மீன்கள் கண்காட்சியகம் அமைக்கப்படுகிறது. முதல் தளத்தில் மெய்நிகர் காட்சியகம் என்று அழைக்கப்படும் சிறிய வகை டிஜிட்டல் காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.
வனம் மற்றும் ஆழ்கடல் காட்சிகளை தத்துரூபமாக காட்சியகத்தில் இருக்கையில் இருந்தபடியே நாம் உணர முடியும். அதற்கு ஏற்றார்போன்று ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு, ஆழ்கடல் மற்றும் வனப்பகுதிகளுக்கு உண்மையிலேயே நாம் சென்று வந்த திருப்தியை அளிக்கிறது. இது மே மாதம் பார்வையாளர்களுக்காக திறந்துவிடப்படுகிறது. இந்த சிறிய வகை அரங்கில் 25 இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அரை மணிநேரம் ஓடும் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.
வனம் மற்றும் ஆழ்கடலில் உள்ள உலக சூழல்களை பார்வையாளர்களின் கண் முன்னால் கொண்டுவருவதற்கான நவீன தொழில்நுட்பத்தில் ஒரு புதுமையான அரங்கமாக இது அமையும். ஆபத்து இல்லாத சூழலில் பல்வேறு அரிய தகவல்களை பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும். அறிவியலாளர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு இது பெரிய வகையில் பயனுள்ள வகையில் இருக்கும்.
குறிப்பாக இந்த அரங்கத்தில் வழங்கப்படும் உயர்தர மற்றும் யதார்த்தமான காட்சி வடிவத்தில் உண்மையான தரவை விளக்குவதற்கும் சித்தரிப்பதற்கும் முடியும். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.