தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி விரைவில் அமையும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி விரைவில் அமையும் என்று கும்பகோணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-01-28 22:45 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பா.ஜனதா கட்சி பொதுக்கூட்டம் கடலங்குடி தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.ராஜா தலைமை தாங்கினார். கும்பகோணம் நகர தலைவர் சோழராஜன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, ஜீவா.சிவக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பூண்டி.வெங்கடேசன், வி.ஜி.ரவிக்குமார், வாசுதேவன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பண்ணவயல்.இளங்கோ மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்,ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு.முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:–

தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி விரைவில் அமையும். இனி தமிழ்நாட்டிற்கு தேவை நேர்மையான, தூய்மையான, வளர்ச்சி தரக்கூடிய ஒரு அரசாங்கம். அப்படிப்பட்ட அரசாங்கத்தை பா.ஜனதா கட்சி தரும். 2019–ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.


அதை தொடர்ந்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 50 ஆண்டுகளாக தமிழகத்தை அழித்துக் கொண்டிருக்கும் கழகங்களுக்கு மக்கள் சாரியான பாடம் புகட்ட காத்திருக்கிறார்கள். அதன்மூலம் தமிழகத்திலும் பா.ஜனதா அரசு அமையும். தமிழக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அரசியல் கட்சியினரிடம் என்ன என்ன வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளீர்கள் என்று மக்கள் கேள்வி கேட்க வேண்டும். தமிழகத்தின் அரசியல் நிலைமையை மாற்ற பா.ஜனதா கட்சியால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்