வட்டவடிவு பாறையில் முகாமிட்டிருந்த 30 யானைகள், ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன
வட்டவடிவு பாறையில் முகாமிட்டிருந்த 30 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டபட்டன.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து தேவர்பெட்டா வழியாக ஜவளகிரி காட்டிற்குள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 200-க்கும் மேற்பட்ட யானைகள் நுழைந்தன. இவை பல குழுக்களாக பிரிந்து அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து, அங்கு விவசாய நிலங்களில் உள்ள ராகி, சோளம், கம்பு, வாழை போன்ற பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் ஓசூர் அருகே சானமாவு காட்டில் முகாமிட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட யானைகள் அங்கிருந்து பீர்ஜேப்பள்ளி வழியாக விரட்டப்பட்டன. இந்த யானைகள் அனைத்தும் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வட்டவடிவு பாறை என்னும் இடத்தில் முகாமிட்டிருந்தன. இவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி மற்றும் உதவி வன பாதுகாவலர் பிரியதர்ஷினி ஆகியோர் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் வனவர்கள், வேட்டை தடுப்பு குழுவினர் அந்த யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த 30 யானைகளையும் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும், அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள மரக்கட்டா காப்பு காடு வழியாக ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டினார்கள். இந்த யானைகள் அனைத்தும் ஜவளகிரி அருகே தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதன் காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டன.
தற்போது ஜவளகிரி காட்டுப்பகுதியில் 30 யானைகள் உள்ளதால், பொதுமக்கள் யாரும் வனப்பகுதி அருகில் செல்ல வேண்டாம் என்றும், விவசாயிகள் ஆடு, மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்க்க வேண்டாம் என்றும் வனத் துறையினர் தெரிவித்தனர்.