பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தி.மு.க. சார்பில் இன்று பஸ் மறியல் போராட்டம்

பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தி.மு.க. சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) 21 இடங்களில் பஸ் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.;

Update: 2018-01-28 22:15 GMT
கடலூர்,

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரையில் தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்த கழக செயல் தலைவர் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் படி ஏழை, எளியோரை பாதிக்கின்ற வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்திய மாநில அரசை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) காலை கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் பஸ் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.அதன்படி கடலூர் கிழக்கு மாவட்டத்தில் வடலூர், கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், வல்லம்படுகை, பி.முட்லூர், சேத்தியாத்தோப்பு, பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு, கம்மாபுரம், மந்தாரக்குப்பம், கீரப்பாளையம் ஆகிய 13 இடங்களில் நடைபெறும் பஸ் மறியல் போராட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணியினரும், கழக முன்னோடிகளும், கழக தோழர்களும் கழக கொடியேந்தி பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்