ஜல்லிக்கட்டில் 639 காளைகள் சீறிப்பாய்ந்தன; 19 பேர் காயம்
வையம்பட்டி அருகே கருங்குளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 639 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயம் அடைந்தனர்.
வையம்பட்டி,
திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த கருங்குளத்தில் புனித அந்தோணியார் ஆலய பொங்கல் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்ததும், தமிழகத்தில் முதலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது கருங்குளத்தில் தான். இந்த ஆண்டும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவுற்ற நிலையில் நேற்று காலை ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
முதலில் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக அழைத்துவரப்பட்ட அனைத்து காளைகளையும் கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து, தகுதியான காளைகளை வாடிவாசலுக்கு அனுப்பினர். இதேபோல் மாடுபிடி வீரர்களையும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து உடல் தகுதியானவர்களை மட்டுமே போட்டிக்கு அனுமதித்தனர். ஜல்லிக்கட்டு திடலுக்கு மாடுபிடி வீரர்கள் வந்ததும் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் பொன்ராமர் கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.
முதலில் அந்தோணியார் ஆலய காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து உள்ளூர் காளைகளும், அதன் பின்னர் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த காளைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்று விட்டன. சில காளைகள் மட்டும் களத்தில் நின்றன. மாடுபிடி வீரர்கள் காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர்.
இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், ஆட்டுக்குட்டி, சில்வர் பாத்திரங்கள், மிக்சி, மின்விசிறி என பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டின் போது விதிமுறைகளை மீறி காளையின் கொம்பை பிடித்த வீரர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர்.
மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு குழுக்களாகவே மாடுகளை பிடிக்க மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மொத்தம் 656 காளைகள் கொண்டு வரப்பட்டதில் 17 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 639 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. இதேபோல் 306 மாடுபிடி வீரர்களில் 24 பேருக்கு உடல் தகுதி இல்லாத காரணத்தால் 282 வீரர்கள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு காளைகள் முட்டித் தள்ளியதில் 11 மாடுபிடி வீரர்கள், 2 பார்வையாளர்கள், 6 மாட்டின் உரிமையாளர்கள் என மொத்தம் 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு திடலுக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் படுகாயமடைந்த பிச்சை மணியாரம்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 20), கருங்குளத்தைச் சேர்ந்த மைக்கேல் (19) ஆகியோர் மட்டும் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜல்லிக்கட்டு நிபந்தனைகளின்படி நடைபெறுகின்றதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கருங்குளம் பகுதியே விழாக்கோலம் பூண்டது. ஜல்லிக்கட்டையொட்டி வையம்பட்டியில் இருந்து கரூர் செல்லும் சாலை அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.
ஜல்லிக்கட்டின் போது, செய்தி சேகரிக்க எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதில்லை. இனி வரும் காலங்களில் முறையான வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி செய்தியாளர்கள் சட்டையில் கருப்பு சின்னம் அணிந்து செய்திகளை சேகரித்தனர்.